குஜராத்தில் பாலம் இடிந்ததில் 10 பேர் பலி

குஜராத், ஜூலை.09-

குஜராத்தில் பாலம் இடிந்து ஆற்றில் விழுந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் ஆற்றில் விழுந்தன. மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

குஜராத்தில் மாநில நெடுஞ்சாலையில் உள்ள கம்பீரா என்ற பாலம் மாஹிசாகர் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மீது தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. வதோதரா மற்றும் ஆனந்த் மாவட்டங்களை இந்த பாலம் இணைக்கிறது.

இந்நிலையில் கம்பீரா பாலம் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. பாலத்தின் ஒரு பகுதி அப்படியே ஆற்றில் விழ, அப்போது வந்து கொண்டிருந்த 2 லாரிகள், 2 வேன்கள் உள்பட 6 வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்தன.

விபத்தில் 3 பேர் பலியானதாக தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரண எண்ணிக்கை உயரலாம் என ஐயுறப்படுகிறது. தகவலறிந்த மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்துச் சென்றனர். அங்கு ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

WATCH OUR LATEST NEWS