கிளப் உலகக் கிண்ணம்: இறுதியாட்டத்திற்கு முன்னேறியது செல்சி

நியூ ஜெர்சி, ஜூலை.09-

செல்சி, கிளப் உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது. அரையிறுதி ஆட்டத்தில் அது, பிரேசில் கிளப்பான ஃபுலுமினென்ஸை 2க்கு 0 என்ற கோல்களில் தோற்கடித்தது. நியூ ஜெர்சியின் மெட் லைவ் அரங்கில் அந்த அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே செல்சி ஆதிக்கம் செலுத்தி வந்தது. அதன் முதல் கோலை ஜோய் பெட்ரோ ஆட்டத்தின் 18 ஆவது நிமிடத்தில் புகுத்தினார். முற்பாதி ஆட்டம் 1 க்கு 0 என முடிவடைந்தது. பிற்பாதியில் 56 ஆவது நிமிடத்தில் பெட்ரோ மீண்டும் ஒரு கோலைப் போட்டார். அதன் வழி செல்சி வெற்றியாளரானது. பெட்ரோ ஆட்ட நாயகனுமானார்.

இறுதியாட்டம் அடுத்த வாரம் நடைபெறுகிறது. செல்சி அவ்வாட்டத்தில் பிரான்சின் பிஎஸ்ஜி அல்லது ஸ்பெயினின் ரியால் மாட்ரிட்டுடன் களமிறங்கும்.

WATCH OUR LATEST NEWS