சைபர்ஜெயா, ஜூலை.09-
தண்ணீர் கட்டண விகிதத்தை மறுபரிசீலனைச் செய்யக் கோரி பத்து மாநில அரசாங்கங்களிடமிருந்து ஸ்பான் ( SPAN ) எனப்படும் தேசிய தண்ணீர் விநியோகச் சேவை ஆணையம், விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது.
பினாங்கு, பெர்லிஸ், கெடா, கிளந்தான், திரெங்கானு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர் மற்றும் பகாங் ஆகிய பத்து மாநிலங்களிமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.
தற்போது அந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அது தெரிவித்துள்ளது. இது குறித்து தீர்க்கமாக முடிவு எடுப்பதற்கு முன்னதாக இந்த பத்து மாநிலங்களில் உள்ள 27.2 மில்லியன் பயனீட்டாளர்களின் நல்வாழ்வு தொடர்பில் அனைத்து அம்சங்களும் மிக கவனமாக ஆராயப்படும் என்று ஸ்பான் உறுதி அளித்துள்ளது.