ஜோகூர் பாரு, ஜூலை.09-
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 22 பேரை ஏற்றி வந்த வேன் டிரெய்லர் லோரியுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் காயமுற்ற நான்கு மாணவர்களில் இருவர் இன்னமும் ஜோகூர் பாரு ஹோஸ்பிடல் சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் தென் திசையிலுள்ள பண்டார் துன் ஹுசேன் ஓன் வெளியேறும் சாலையில் சிமெண்ட் டிரெய்லருடன் வேன் மோதிய சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்.
காயமுற்றவர்களில் தெப்ராவ் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த இரு மாணவிகளின் உடல் நிலையைக் கண்டறிய தெப்ராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம்மி புவா அந்த மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
இரு மாணவர்களையும் நலம் விசாரித்ததுடன் உணவுப் பொருள் கூடைகளையும், கணிசமான நிதி உதவியையும் வழங்கி, தமது ஆதரவைப் தெரிவித்துக் கொண்டார்.