கோலாலம்பூர், ஜூலை.10-
நீதித்துறையில் தலையீடு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் தற்போது ஓசா எனப்படும் ரகசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பான விசாரணை முடிவடைந்து விட்டது. விசாரணை அறிக்கை முழுமையாக இல்லை என்பதால், அதனை முழுமைப்படுத்துமாறு சட்டத்துறை அலுவலகம், அந்த விசாரணை அறிக்கையை மறுபடியும் போலீசாரிடமே ஒப்படைத்துள்ளதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
விசாரணையின் போது பல்வேறு ஆதாரங்களைப் போலீசார் சேகரித்துள்ளதாக அவை தெரிவித்துள்ளன.