நேரத்தை விரயமாக்கியது இல்லை

கோலாலம்பூர், ஜூலை.10-

தம்முடைய வெற்றிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் வீண் சோம்பல் பட்டதில்லை என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.

நேரத்தை வீணடிப்பது தமக்குப் பிடிக்காத பழக்கம் என்றும், அதே வேளையில் நாட்டின் ஆட்சிப் பீடத்தில் இருந்த போது, நேரம் காலம் பார்க்காமல் கடுமையாக உழைந்தது, தம்முடைய அபரிமித முன்னேற்றத்திற்குப் பெரும் படிக் கல்லாக அமைந்தது என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.

இன்று ஜுலை 10 ஆம் தேதி தமது 100 ஆவது பிறந்த விழாவை மிக எளிமையாகக் கொண்டாடிய துன் மகாதீர், தம்முடைய வெற்றியின் ரகசியத்தை வெளிப்படுத்திய போது இதனைத் தெரிவித்தார்.

தாம் ஒரு மருத்துவர் என்பதால் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் தனிக் கவனம் செலுத்தி வந்ததை ஒப்புக் கொண்ட துன் மகாதீர், இதற்கு மேலாக ஒவ்வொரு மனிதருக்கும் கட்டொழுங்கு அவசியமாகும் என்றார்.

கட்டொழுங்கு இருந்தால் மட்டுமே உடல் ஆரோக்கியம், முன்னேற்றம், கட்டுப்பாடு என்ற கடிவாளம் நம்முடன் இருக்கும் என்றார் துன் மகாதீர்.

WATCH OUR LATEST NEWS