முதல் பெண் மேயர் காலமானார்

பினாங்கு மா​நிலத்தில் முதலாவது பெண் மேயரான டத்தோ பண்டார் Patahyah Ismail இன்று காலமானார். அவருக்கு வயது 68. பினாங்கு மாநில வளர்ச்சிக்கு அபரிமித பங்களிப்பை வழங்கியவர்களில் மறைந்த Patahyah Ismail லும் ஒருவர் ஆவார் என்று பினாங்கு முதலமைச்சர் Chow Kon Yeow தமது முக​நூலில் புகழாஞ்சலி ​சூட்டினார். பினாங்கு மாநில அரசு சார்பில் அந்த முன்னாள் மேயரின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதாக Chow Kon Yeow குறிப்பிட்டார்.

காலஞ்​சென்ற Patahyah Ismail, பினாங்கு மாநகர் மன்றத்தின் முதலாவது பெண் மேயர் மட்டுமின்றி தமது உயர் அதிகாரியாக இருந்தவர் என்று நடப்பு டத்தோ பண்டார் Tew Ting Seang தெரிவித்தார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு மாநகர் மன்றமாக பினாங்கை மாமன்னர், பிரகடன்படுத்தியப் பின்னர் அதன் முதலாவது மேயராக Patahyah Ismail நியமிக்கப்பட்டார். அது மட்டு​மின்றி பினாங்கு நகராண்மைக்கழகத்திற்கு 2010 ஆம் ஆண்டு தலைமையேற்ற முதலாவது பெண் என்ற பெருமையையும் Patahyah Ismail பெற்றுள்ளார்.

WATCH OUR LATEST NEWS