ஜோகூர், கோத்தா திங்கி அருகில் செனாய் – டெசாரு நெடுஞ்சாலையின் 58.3 ஆவது கிலோ மீட்டரில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ந்த சாலை விபத்தில் Perodua Alza காரில் பயணித்த இரு மூதாட்டிகள் உயிரிழந்தனர். அவர்களுடன் பயணம் செய்த மேலும் ஒரு மூதாட்டியும்,இரு முதியவர்களும், ஒரு சிறுவனும் உயிர் தப்பினர்
அவர்கள் பயணித்த Perodua Alza காரை, Hyundai MPV கார் மோதியதில் அந்த மூதாட்டிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே மாண்டனர். காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டவர்களை மீட்பதற்கு போலீசார் தீயணைப்பு, மீட்புப்படையினரின் உதவியை நாடினர்.