தனது தாயாரையும், தங்கையையும் கத்தியால் குத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட ஆடவர் ஒருவர், தனக்கு எதிரான அவ்விரு குற்றச் சாட்டுகளையும் இன்று மலாக்கா செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
24 வயதுடைய முகமது ஹிடாயத் அபு சமாட் என்ற ஆடவர், 49 வயதுடைய தனது தாயாரான சபியா அப்துல் காதரையும், 11 வயதுடைய சகோதரி நூர் இமாம் டானியா அபு சமாட்டையும், இறைச்சி வெட்டும் கத்தியால் வெட்டி கடுமையான காயங்களை ஏற்படுத்தியதற்காக குற்றஞ் சாட்டப்பட்டார்.
இவர் இக்குற்றத்தைக் கடந்த மார்ச் 10 ஆம் தேதி, தாமான் புக்கிட் லோரோங் இண்டா என்ற குடியிருப்புப் பகுதியில், இரவு 10 மணியளவில் புரிந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் அல்லது பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 326 பிரிவின் கீழ் அந்த ஆடவர் குற்றஞ்சாட்டப்பட்டார்.