முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதின் யாசினால், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட டான்ஸ்ரீ அஸாம் பாக்கியைப் பதவி மாற்றம் செய்யாதது குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளித்துள்ளார்.
முகைதீன் யாசின் பிரதமராக பொறுப்பேற்றப்பிறகு லத்திப்பா கோயாவின் பதவி விலகலைத் தொடர்ந்து அந்த ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த அஸாம் பாக்கி, எஸ்.பி.ஆர்.எம். மின் தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டார்.
தற்போது, நாட்டிற்கு தாம் தலைமையேற்ற போதிலும், எஸ்.பி.ஆர்.எம். தலைமை ஆணையரை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று அன்வார் விளக்கினார். ஒவ்வொரு பிரதமரும் மாறும் போது, எஸ்.பி.ஆர்.எம். போன்ற ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் பதவி மாற்றப்படும் என்ற ஒரு தவறான தோற்றம் ஏற்படுவதைத் தவிர்க்கவே அஸாம் பாக்கியை தாம் மாற்றவில்லை என்று அன்வார் விளக்கினார். எஸ்.பி.ஆர்.எம். ஒரு சுதந்திரமான அமைப்பாகும். அது பிரதமரின் உத்தரவுக்குக் கட்டுப்பட வேண்டிய அவசியல்லை என்பது நடப்பு விதிமுறையாகும் என்று அன்வார் தெளிவுடுத்தினார்.