மலாக்கா முதலமைச்சர் சுலைமான் அலி, இன்று தமது பதவியை ராஜினமா செய்துள்ளார்.
லென்டு சட்டமன்ற உறுப்பினரான சுலைமான் அலி, கடந்த 2021 ஆம் ஆண்டு மலாக்கா சட்டமன்ற தேர்தலில் பாரிசான் நேஷனல் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
மலாக்கா மாநில அம்னோ தலைவர் அப்துல் ரவுப் யூசோ, மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்கக்கூடும் என்று ஆருடங்கள் வலுத்துவரும் வேளையில், முதலமைச்சர் பதவியிலிருந்து சுலைமான் அலி விலகியுள்ளார்.