வாராந்திர விவாதத்தில் பங்கேற்க வேண்டும்

மக்களவைக் கூட்டம் நடைபெறும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நாட்டின் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமும், எதிர்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்சா ஜைனுதீனும், வாராந்திர விவாதத்தில் பங்கேற்க வேண்டுமென்று முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் பரிந்துரைச் செய்துள்ளார்.
நாடாளுமன்றம் / பொது விவாத மேடையாக மாறும் போது எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் ஹம்சா ஜைனுதீன், அரசாங்க நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதில் முக்கிய பங்காற்ற முடியும் என்று அம்னோ முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவரான கைரி ஜமாலுதீன் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றம் என்பது வெறும் கேள்விப் பதில் மேடையாக மட்டுமல்லாமல், நாடு மற்றும் மக்களின் மேன்மைக்கு ஆக்கப்பூர்வமான விஷயங்களை அரசாங்கத் தரப்பிலும், எதிர்கட்சித் தரப்பிலும் விவாதிக்கக்கூடிய களமாக மாற வேண்டும் என்று கைரி ஜமாலுதீன் கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS