மலாக்கா மாநில அரசு நிர்வாகத்தில் மாற்றம் ஏற்பட போவதாக வெளிவந்துள்ள தகவல் தொடர்பில், பொறுமை காக்கும் படி மாநில அம்னோ தலைவர் அப்துல் ரவுப் யூசோ, பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக, மாநில அரசாங்கம் அதிகாரப்பூர்வமான ஓர் அறிவிப்பை வெளியிடும் என்றும், அதுவரையில் தாம் எதுவும் கருத்துரைக்க இயலாது என்றும் அப்துல் ரவுப் குறிப்பிட்டுள்ளார்.
மலாக்கா முதலமைச்சர், சுலைமான் முகமட் அலி க்கு பதிலாக அப்துல் ரவுப், வரும் வெள்ளிக்கிழமை மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்கவிருக்கிறார் என்று தகவல்கள் தற்போது கசிந்துள்ளன.