சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்ற சிறார்களைச் சிறந்த முறையில் பாதுகாக்கும் வகையில் 2017 ஆம் ஆண்டுக்கான சட்டத்திருத்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது வாசிப்புக்கு விடப்பட்ட அச்சட்டத்திருத்த மசோதா, பின்னர் குரல் வாக்கெடுப்பின் வழி நிறைவேற்றப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் அசலினா ஒத்மான் சைட் தெரிவித்தார்.
நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப சட்டங்கள் இருப்பதை உறுதி செய்யவும், ஆன்லைன் மூலமாக சிறார்களுக்கு எதிராக பாலியல் சுரண்டல்கள் நிகழ்வதைத் தடுப்பதற்கும், நடப்புச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த சட்டத்திருத்தம் மீதான மசோதா குறித்து 10 எம்.பி. க்கள் விவாதித்தனர் என்று அசலினா குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS