பெட்டாலிங் ஜெயா, தாமான் கனகாப்புரத்தில் நாய்களைப் பிடிக்கும் முயற்சியின் போது, மாநகர் மன்ற ஊழியர்களால் தாம் தாக்கப்பட்டதாக அண்மையில் புகார் செய்த முதியவர் ஒருவர், வரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கிறார்.
அந்த முதியவரின் வீட்டில் நாய்களைப் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்ட பெட்டாலிங் ஜெயா, மாநகர் மன்ற ஊழியர்களின் பணிக்கு இடையூறு விளைவித்ததற்காக அந்த வயோதிகர் மீது குற்றஞ் சாட்டப்படும் என்று மாவட்ட போலீஸ் தலைவர் ஃபக்ருடீன் அப்துல் ஹமீத் தெரிவித்துள்ளார்.