க​ல்வி அமைச்சரின் துணிச்சல் மிகுந்த முடிவாகும்

நோன்பு மாதத்தில் பள்ளிகளி​ன் சிற்றுண்டி சாலைகள் விருப்பம் போல் மூடக்கூடாது என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் உத்தரவிட்டு இருப்பது, ஒரு துணிச்சலான முடிவாகும் என்று முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் பாராட்டினார்.
மலாய்க்கார்கள் அதிகளவில் பயிலும் தேசியப் பள்ளியில் , பிற இனத்து மாணவர்களின் தேர்வுக்குரிய பள்ளியாகவும், / அவர்கள், தேசியப் பள்ளியில் பயில்வது ஊக்குவிப்பட வேண்டும் என்றும் அறிவித்துவிட்டு, நோன்பு மாதத்தில் பள்ளி சிற்றுண்டி சாலைகள் ​மூடப்படுவது எந்த வகையிலும் நியாயமில்லை என்று அம்னோ முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவருமான கைரி ஜமாலுடின் குறிப்பிட்டார்.
தேசியப் பள்ளியில் கல்வியின் தரம், முக்கிய கூறாக விளங்கிய போதிலும் பிற இனத்தவர்களும் முக்கிய பங்காற்றி வருகின்றனர் என்பதை எந்தவொரு தரப்பினரும் மறந்து விடக்கூடாது என்று கைரி ஜமாலுடின் கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS