பதின்ம வயதுடைய இரண்டு பெண்கள் பயணித்த மோட்டார் சைக்கிள், கொள்கலன் லோரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவரும் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் நேற்று முன்னிரவு 11.18 மணியளவில் ஈப்போ – கோலாலம்பூர் சாலையின் 121 ஆவது கிலோ மீட்டரில் சிலிம் ரீவர் அருகில், கம்போங் கெளாவார் என்ற இடத்தில் நிகழ்ந்தது. 19 வயதுடைய மிமி நூர்வஹீடா நூர் கமர் ஹிஷாம் மற்றும் நூர் நபிலா ரொஸ்டி என்ற இரு பெண்கள் இச்சம்பவத்தில் மாண்டதாக போலீசார் அடையாளம் கூறினர்.
அந்த கொள்கலன் லோரி, திடீரென்று சாலையின் யூ வளைவில் திரும்பிய போது, வேகக்கட்டுப்பாட்டை இழந்த அப்பெண்கள், மோட்டார் சைக்கிளுடன் அந்தப் பார வண்டியின் அடியில் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மாண்டார். மற்றொருவர், சிலிம் ரீவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக முவாலிம் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஹஸ்னி முகமட் நசீர் தெரிவித்தார்.