மலாக்கா முதலமைச்சர் பதவியை ராஜினமா செய்த சுலைமான் முகமட் அலி, தமது அலுவலகத்தைக் காலி செய்தப் பின்னர், கண்ணீருடன் விடைப்பெற்றார்.
லென்டு சட்டமன்ற உறுப்பினரான சுலைமன் அலி விடைப்பெறுவதற்கு முன்பு, தமது அலுவலக அதிகாரிகளின் முன்னிலையில் உரையாற்றிய போது, துயரத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் கண் கலங்கினார்.
முதலாமைச்சர் பதவியிலிருந்து விலகியது தமக்குக் கவலை இல்லை என்றாலும், தம்முடன் இணைந்து பணியாற்றிய அதிகாரிகளை விட்டுப் பிரிவது தமக்குப் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக கடந்த 16 மாதக் காலமாக மலாக்கா முதலமைச்சராக பதவி வகித்த சுலைமான் அலி குறிப்பிட்டார்.