ஆறு மாநிலங்களில் நடத்தப்படவிருக்கும் சட்டமன்ற தேர்தலில், கிட்டத்தட்ட 42 கோடி வெள்ளி செலவாகும் என்று மதிப்பிடப்படுவதாக துணை நிதி அமைச்சர் அகமட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.
தேர்தலை இவ்வாண்டில் நடத்தினால் மட்டுமே நடப்புச் சூழ்நிலைக்கு ஏற்ப இந்தச் செலவினம் கணிக்கப்பட்டுள்ளதாக துணை அமைச்சர் விளக்கினார்.
சிலாங்கூர், கெடா, கிளந்தான், திரெங்கானு, நெகிரி செம்பிலான் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களில் வரும் ஜூன் மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான செலவினம் தொடர்பில், மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு அகமட் மஸ்லான் பதிலளித்தார்.