நாட்டில் நிலவிவரும் ஆசிரியர்கள் பற்றாக்குறைப் பிரச்னையைத் திர்ப்பதற்கு வெகு விரைவில் புதிய ஆசிரியர்களைப் பணிக்குச் அமர்த்தும் சிறப்பு திட்டத்தைக் கல்வி அமைச்சு அமல்படுத்தவிருப்பதாக துணைக் கல்வி அமைச்சர் லிம் ஹுய் இங் தெரிவித்துள்ளார்.
கட்டாயப் பணி ஓய்வு, விருப்புரிமை பேரில் பணி விலகல், பதவி உயர்வு, உயர் கல்வி பயில்வதற்கு விடுமுறை, மரணம் போன்ற பல்வேறு காரணங்களினால் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு சிறப்பு திட்டத்தின் கீழ் ஆள் சேர்ப்பு நடைபெறும் என்று துணை அமைச்சர் விளக்கினார்.
தற்போது, 4.49 விழுக்காடு அல்லது 19 ஆயிரத்து 433 ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தப் பற்றாக்குறையைத் தீர்க்க பல்வேறு ஆக்கப்பூர்வமான நாடவடிக்கைகளைக் கல்வி அமைச்சு எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக, புதிய ஆசிரியர்கள் சேர்ப்பு விரைவில் மேற்கொள்ளப்படவிருப்பதாக துணை அமைச்சர் லிம் ஹுய் இங் விளக்கினார்.