Bak Kut Teh- வை அங்கீகரிக்க மறுப்பதா?

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 5 –

பன்முக கலாச்சார, பாரம்பரியத்தை கொண்ட மலேசியாவில் தேசிய பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றாக சீனர்களின் பாக் கு தெ வை அங்கீகரிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் அம்னோ இளைஞர் பிரிவுத்தலைவர் டாக்டர் முகமாட் அக்மால் சாலேவை டி.ஏ.பி செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் Teresa Kok இன்று கடுமையாக சாடினார்.

பாக் கு தெ வை தேசிய பாரம்பரிய உணவாக அங்கீரிப்பதில் அம்னோ இளைஞர் பிரிவுக்கு என்ன பிரச்னை தலைத்தூக்கப் போகிறது என்று திரேசா கொக் வினவினார்.

சீனர்களின் விருப்பத்திற்குரிய முதன்மை உணவு வகைகளில் ஒன்றான பாக் கு தெ வை தேசிய பாரம்பரிய உணவு வகையாக அ ரசாங்கம் அங்கீரிப்பது மூலம் சீனாவிலிருந்து அதிகமான சுற்றுப்பயணிகளை மலேசிய கவர முடியும் என்று முன்னாள் அமைச்சருமான திரேசா கொக், இன்று நாடாளுமன்றத்தில் வாதிட்டார்.

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணகக்கான சீன சுற்றுப்பயணிள் மலேசியாவிற்கு வருகை தருவது மூலம் நாட்டின் தேசிய வருமான பெருக்கத்தற்கு அவர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர் என்பதையும் திரேசா கொக் சுட்டிக்காட்டினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்