மூவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது

புத்ராஜெயா, மார்ச் 5 –

ஒன்பது ஆண்டுகளுக்கு சீக்கிய வர்த்தப் பெண்மணி ஒருவரை கடத்திச் சென்று, கொன்று, சடலத்தை பினாங்கு இரண்டாவது பாலத்திலிருந்து வீசிய குற்றத்திற்காக தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு பெண் மற்றும் இரண்டு ஆடவர்களுக்கு புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று தூக்குத் தண்டனைக்கு பதிலாக தலா 35 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. .

32 வயது A. மலர்விழி, 37 வயது ஜ. Sunil Singh மற்றும் 30 வயது சி . கவின்முகிலன் ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி வாசிர் அலாம் மைடின் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா, சன்வே பிராமிட் அருகில் ஒரு கட்டுமானத் தளத்திலிருந்து வர்த்தகப் பெண்மணியான Balveer Kaur என்பவரை கடத்தி சென்று, அவரின் குடும்பத்திடமிருந்து 20 லட்சம் வெள்ளி பிணைப்பணம் கோரி மிரட்டியதுடன், அந்தப் பெண்மணியை கொன்று, சடலத்தை கடலில் வீசிய குற்றத்திற்காக அந்தப் பெண்மணியிடம் வேலை செய்த சுனில் சிங் உட்பட மூவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்தது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்