El Nino தாக்கத்தால் லங்காவியில் நீர் விநியோகத் தடை

எல் நினோ தாக்கத்தைத் தொடர்ந்து, லங்காவி தீவில் உள்ள பல பகுதிகளில் தண்ணீர் விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டது.

Kuah, Kisap, Kilim, Perana, Bayas, Ulu Melaka, Temoyong, Pantai Cenang, Pantai Tengah ஆகியப் பகுதிகளில் இந்தப் பிரச்னை ந்லவுகிறது என Syarikat Air Darul Aman தெரிவித்துள்ளது.

வட மலேசியா பகுதியில் நெடிய வறட்சி காலம் தொடங்கி இருக்கிறது. இதனால் லங்காவியில் இருக்கும் மலாக்கா ஆறு வற்றி வருகிறது. இவ்வட்டாரத்தில் நீரின் தேவை அதிகரிக்கும் சூழலில் தண்ணிர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என அந்நிறுவனம் கூறியது.

தற்போதையச் சூழலைக் கருத்தில் கொண்டு பயனர்கள் தண்ணீஇரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அந்த நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்