FAD பாதுகாப்பான மீன்பிடி பகுதிகளை உருவாக்குகின்றன

கோலாலம்பூர், பிப்ரவரி 24 –

மீனவ சமூகத்தினர் மீன் பிடிப்பு தொழிலை மட்டுமே முழுமையாக சார்ந்திருப்பதால் தேசிய பெட்ரோலிய நிறுவனமான பெட்ரோனாஸ், மலேசியாவின் மீன்வளத்துறையுடன் ஒன்றிணைந்து Fish Aggregating Device (FAD) எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

பல்வேறு வகையான மீன்களை ஈர்ப்பதற்காகவும் செயற்கை மீன் சேகரிப்பு தளங்களை உருவாக்குவதற்காகவும் கடலில் வியூக ரீதியாக வைக்கப்படும் சிறப்பு சாதனங்களாக இந்த FAD செயல்படுகின்றது.

இத்திட்டம் உள்ளூர் மீனவ சமூகத்தின் பாதுகாப்பினை உறுதிசெய்வதற்கும் தடைசெய்யப்பட்ட நிறுவனத்தின் எண்ணெய் சுரங்கப்பகுதிலிருந்து அவர்களை தடுத்து வைப்பதற்கும் பெட்ரோனாஸின் தற்போதைய உறுதிப்பாட்டிற்கு இணங்க இவை செயல்படுவதாக பெட்ரோனாஸ் வியூக தொடர்பாளரின் பொது மேலாளர் அய்மி சைரின் முகமட் தெரிவித்தார்.

கடல் சுற்றுச்சூழல் அமைப்பின் சமநிலையை பராமரிப்பதில் நிலையான, பாதுகாப்பான மீன்பிடி நடைமுறைகளின் முக்கியத்துவத்தை பெட்ரோனாஸ் அங்கீகரிப்பதாக அய்மி சைரின் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்