பதாகைகளில் கருப்பு சாயம் பூசிய குற்றவாளியை போலீஸ் வளைவீச்சு

ஜோர்ஜ்டவுன்,பிப்ரவரி 24-

ஜோர்ஜ்டவுன் னில் சீனப் புத்தாண்டு வாழ்த்து பதாகைகளில் குறிப்பாக, பினாங்கு முதலமைச்சர் சௌ கொன் யௌ வின் படத்தை கொண்டிருக்கும் பதாகைகளில் கருப்பு சாயம் பூசிய சந்தேகிக்கும் நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தேசத் துரோகக் குற்றச்செயலை புரிந்த அடிப்படையில் குற்றவியல் சட்டம் 427 பிரிவின் கீழ் சந்தேகிக்கும் நபர் தேடப்பட்டு வருவதாக தீமுர் லௌட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி ராஸ்லாம் அப்துல் ஹமிட் தெரிவித்தார்.

இதுக்குறித்து புகிட் பென்டேரா, டி.ஏ.பி சோசியலிஸ்ட் யூத் யிடம் இருந்து நேற்று புலௌ தீகுஸ் காவல் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற புகாரை அடுத்து அந்நபர் தேடப்பட்டு வருவதாக ராஸ்லாம் அப்துல் கூறினார்.

முன்னதாக, ஜாலான் புர்மா,ஜாலான் கெலாவை,லெபுராயா மக்தாப் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த குறிப்பிடப்பட்ட பதாகைகளில் கிறுக்கி வைக்கப்பட்டிருப்பதுடன் சாயம் பூசப்பட்டிருப்பதை கடந்த வியாழக்கிழமை புக்கிட் பென்டேரா டி.ஏ.பி.ஸ்.ஐ யினர் காணப்பட்டதை அடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாக ராஸ்லாம் அப்துல் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்