Felda குடியிருப்புவாசிகளின் நலனுக்காக அரசாங்கம் ஒரு புதிய அணுகுமுறையை அறிவிக்கும் – துணைப் பிரதமர் அகமாட் சைட் அறிவுறுத்து

தேசிய நில மேம்பாட்டு வாரியமான Felda மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல புதிய அணுகுமுறைகளை அரசாங்கம் அடுத்த வாரம் அறிவிக்கும் என்று துணைப் பிரதமர் டத்துக் ஶ்ரீ டாக்டர் அகமாட் சைட் ஹமிடி தெரிவித்தார்.

குறிப்பாக, குடியேற்றவாசிகளின் வருமானத்தை அடிப்படையாக கொண்டு பெல்டா வில் உடனடி மாற்றங்களை செயல்படுத்துவதில் உறுதியாக இருப்பதாக புறநகர் வட்டார மேம்பாட்டு அமைச்சர் அகமாட் சைட் ஹமிடி கூறினார்.

அடுத்தடுத்த பல அணுகுமுறைகளை உடனடியாக அறிவிப்பேன் என்று 2024 ஆம் ஆண்டு பூமிபுத்தேரா பொருளாதார காங்கிரஸில் ஒரு சிறப்பு பேட்டியில் அகமாட் சைட் இதனை அறிவித்தார்.

பெல்டா வின் சரிவுற்ற செயல்திறன் குறித்து கருத்து தெரிவித்த அகமாட் சைட், தேசிய ஏஜென்சிகளை மீட்டெடுக்கும் பொறுப்பு பெல்டா வின் கீழ் குடியேறியவர்கள் மற்றும் அந்த நிறுவனங்களின் அம்சத்தில் பார்க்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

பெல்டா குடியிருப்பிலிருந்து புதிய தலைமுறையினர் வெளியேறாமல் இருப்பதற்கும், நகரத்திற்கு குடிபெயர்ந்து செல்லாமல் இருப்பதை தடுக்கவும் பெல்டா நிறுவனத்திற்கு தொழில்துறையை ஊக்குவிக்கும் முறையை அரசாங்கம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று அகமாட் சைட் கேட்டு கொண்டார்.

குறிப்பாக, டிஜிட்டலின் பயன்பாடு அப்பகுதியில் அதீத கவனமாக செயல்பட தொடங்குவதுடன் அடுத்து வருகின்ற தலைமுறையினருக்கு பெரும் பங்காற்றும் என்று அகமாட் சைட் மேலும் வலியுறுத்தினர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்