‘Gurney Bay’ பொதுமக்களுக்கு இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது

பினாங்கில் ‘Gurney Bay’ என்கிற புதிய கடலோர பூங்கா முதற்கட்டமாக இப்போது பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது என்று பினாங்கு முதலமைச்சர் Chow Kon Yeow தெரிவித்தார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை பினாங்கு மாநில Yang Dipertua Tun Ahmad Fuzi Abdul Razak – வுடன் அவ்விடத்தில் நடைப்பயணம் மேற்கொண்ட போது Chow Kon Yeow இதனை அறிவித்தார்.

Gurney Wharf என்று அறியப்படும் Gurney Bay – வின் முதற்கட்ட வேலைப்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்த வேளையில் இன்றுமுதல் அப்பகுதி பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்படும் என்று Chow Kon Yeow கூறினார்.

200 மில்லியன் வெள்ளி மதிப்பிலான 20.2 ஹெக்டேர் கொண்டிருக்கும் Gurney Bay குழந்தைகள் விளையாடும் பகுதியாகவும், நடைப்பயணம், skate பூங்கா, பொது கழிப்பறை வசதிகள், வாகனம் நிறுத்தும் இடம் ஆகிய பல வசதிகளை உள்ளடக்கி உள்ளதாக அவர் விவரித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்