IPTS முன்னாள் பணியாளர்கள் இருவர் கைது

ஒரு தனியார் உயர்கல்வி கூடத்தின் இரண்டு முன்னாள் பணியாளர்கள் தனிப்பட்ட நோக்கங்களுக்காக நிறுவனத்திடமிருந்து 1 மில்லியன் வெள்ளி ஊழல் செய்த குற்றத்திற்காக பெர்லிஸில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் அவ்விருவரையும் கைது செய்தனர்.

30 வயதிற்கு உட்பட்ட சந்தேகிக்கும் நபர்கள் நேற்று மாலை 5:30 மணியளவில் கோலாலம்பூர் மற்றும் பெர்லிஸ் எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு, விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டதாக எஸ்.பி.ஆர்.எம் குறிப்பிட்டுள்ளது.

சந்தேகிக்கும் இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கி 2023 ஆம் ஆண்டு வரையில் இக்குற்றத்தை புரிந்திருப்பதாக நம்பப்படுகிறது. அந்நபரில் ஒருவர் சிறப்பு அதிகாரி என்ற அதிகாரத்தை பயன்படுத்தி IPTS தலைமை நிதி அதிகாரியிடமிருந்து நிறுவனத்தின் பணத்தை தனிப்பட்ட வங்கிற்கு அனுப்புமாறு வலியுறுத்தியுள்ளார்.

60 வெவ்வேறு வங்கியிலிருந்து கிட்டத்தட்ட 1 மில்லியன் வெள்ளி வரையில் ஊழல் செய்திருப்பது தெரியவந்துள்ளதாக எஸ்.பி.ஆர்.எம் தெரிவித்துள்ளது.

சந்தேகிக்கும் நபர்கள் மீது விசாரணை தொடங்கப்பட்டு வருவதாக பெர்லிஸ் எம்.ஏ.சி.சி இயக்குநர் Suzeliyana Hashim விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்