JSJ 70 பொழுதுபோக்கு மையங்களில் சோதனை

 மலேசிய போலீஸ் படையின் குற்றப் புலனாய்வு துறை, நாடு முழுவதும் உள்ள 70 பொழுதுபோக்கு மையங்களில் Op Noda Khas சோதனை மேற்கொண்டது.

 நேற்று அதிகாலை 1 மணி முதல் 6 மணி வரையில் மேற்கொண்ட திடீர் சோதனையில் 104 உள்ளூர் வாசிகளும் 373 அந்நிய பிரஜைகளும் கைது செய்யப்பட்டனர்.

 சபா, சரவாக் உட்பட்ட நாடு முழுவதிலிருந்து 358 அதிகாரிகளும் 1,425 JSJ உறுப்பினர்களும்  இச்சோதனையில் ஈடுபட்டதாக குற்ற புலனாய்வு துறை துணை தலைவர் Fadil Marsus தெரிவித்தார்.

 போதைப்பொருள் வைத்திருக்கும் குற்றங்கள், பொழுதுபோக்கு உரிமம் இல்லாமல் இயங்கும் வளாகங்கள், சட்டவிரோதமாக வெளிநாட்டு பிரஜைகளை வேலைக்கு வைத்திருத்தல் போன்ற குற்றங்கள் அடிப்படையில் அந்நபர்கள் கைது செய்யப்பட்டதாக Fadil Marsus கூறினார்

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்