லாவோசில் பிடிபட்ட மலேசிய போதைப் பொருள் கடத்தல் மன்னன்

கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட தாய்லாந்து – லாவோஸ் கூட்டு சோதனை நடவடிக்கையில், போதைப் பொருள் கடத்தல் குற்றம் தொடர்பில் தாய்லாந்தில் தேடப்பட்டு வந்த மலேசியர் ஒருவர் பிடிபட்டார்.

39 வயதாக அந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன், சில காலமாக லாவோசில் பகுங்கி இருந்ததாக தாய்;ஆந்து காவல் துறை தெரிவித்தது.

கடந்த 2006 ஆம் ஆண்டு தொடங்கி, Segitiga Emas பகுதியில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விநியோகிப்பு நடவடிக்கைகளில் குறிப்பிட்ட ஆடவர் மிக முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படுவதாக தாய்லாந்து நாட்டின் போலிஸ் படையின் துணைத் தலைவர் Panurat Lakboon குறிப்பிட்டார்.

அந்த ஆடவர் கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி லாவீசில் கைது செய்யப்பட்டார்.

மலேசியாம் சிங்கப்பூர், தாய்லாந்து, சீனா, லாவோஸ் ஆகிய நாடுகளில் மிக முக்கியமான போதைப் பொருள் கடத்தல் காரராகவும், ஆஸ்திரேலியா, தைவான், மலேசியா ஆகிய நாடுகளுக்கு போதைப் பொருளை விநியோகிக்கவும் பண மோசடி நடவடிக்கைக்காகவும் தாய்லாந்து நாட்டைத் தளமாகப் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்