MCA கலந்துக்கொள்ளாதது பெரிக்காதான் நசியனாலுக்கே ஆதாயம்

கோலாலம்பூர், ஏப்ரல் 23-

சிலாங்கூர், கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளரை ஆதரித்து பரப்புரைகளில் களமிறங்கப்போவதில்லை எனும் MCA கட்சியின் முடிவு, தங்களுக்கு ஆதாயத்தை வழங்கும் என பெரிக்காதான் நசியனாலின் தேர்தல் பிரிவு தலைமை இயக்குநர் டத்தோ ஸ்ரீ சனுசி முகமது நோர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

MCA-வுக்கும் பக்காத்தான் ஹாராப்பானுக்கும் இடையிலான உறவில் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டுள்ளது. வரக்கூடிய இடைத்தேர்தலில், அந்த விரிசலை மேலும் பெரிதாக்குவதே தங்களது இலக்கு என்றும் அவர் கூறினார்.

கோல குபு பாரு இடைத்தேர்தலில், தேசிய முன்னணியைச் சேர்ந்த வேட்பாளர் களமிறக்கப்படாவிட்டால், ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளருக்காக பரப்புரைகளில் ஈடுபட போவதில்லை என MCA இதற்கு முன்பு கூறியிருந்தது.

அதே கூற்றை ம.இ.கா-வின் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனும் முன்வைத்திருந்த நிலையில், பின்னர், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதனை திட்டவட்டமாக மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்