ஜாஹித் ஹமிடியின் AFIDAVIT மனு குறித்து மலாய் ஆட்சியாளர்கள் மன்றம் விசாரிக்க நீதிபதி ஆலோசனை

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 23-

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் வீட்டுச் சிறை தொடர்பான நீதிமன்ற நடவடிக்கையில், துணைப்பிரதமரும் உம்னோ தலைவருமான டத்தோ ஸ்ரீ ஜாஹித் ஹமிடி வழங்கியிருக்கும் AFIDAVIT மனுவின் உள்ளடக்கம் குறித்து, மலாய் ஆட்சியாளர்கள் மன்றம் விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி டத்தோ டாக்டர் ஹமீட் சுல்தான் அபு பக்கர் ஆலோசனை விடுத்தார்.

நாட்டின் தலைவர் வெளியிட்டிருந்த ஓர் உத்தரவை, சொந்த அரசாங்கம் மறைத்துள்ளதை துணைப்பிரதமரே கூறியுள்ளது, உலக அரசியல் வரலாற்றில் இது முதல்முறை என அவர் சாடினார்.

ஜாஹித் ஹமிடியின் AFIDAVIT மனுவின் உள்ளடக்கம், சட்ட இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியம் உள்ளது. தற்போது, பொது தளத்தில் அந்த மனு வெளியிடப்பட்டுள்ளதால், அதனை கருத்தில் கொண்டு அதன் உள்ளடக்கத்தை விசாரிக்க, மலாய் ஆட்சியாளர்கள் மன்றம் உத்தரவிட வேண்டும் என்று டாக்டர் ஹமீட் கேட்டுக் கொண்டார்.

தமது எஞ்சிய சிறைக் காலத்தை வீட்டு சிறையில் கழிப்பதற்கு, முன்னாள் பேரரசர் வழங்கியதாக கூறப்படும் கூடுதல் உத்தரவின் உண்மைநிலையை கண்டறிய, நஜிப் ரசாக் நீதிமன்ற நடவடிக்கையை எடுத்திருந்தாலும், மலாய் ஆட்சியாளர்கள் மன்றம் அவ்விவகாரம் குறித்து விசாரணையை மேற்கொள்ள முடியும்.

கூட்டரசு அரசியலைமைப்பு மலாய் ஆட்சியாளர்களுக்கு அந்த அதிகாரத்தை வழங்குவதாக டாக்டர் ஹமீட் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்