MH370 விமானம் பற்றி ஆருடங்களை எளிதில் நம்பிவிடவேண்டாம்

கோலாலம்பூர், மார்ச் 8 –

மலேசிய விமான நிறுவனத்திற்கு சொந்தமான MH 370 விமானம் 239 பேருடன் நடுவானி​ல் மாயமாய் மறைந்த சம்பவம் நிகழ்ந்து இன்று மார்ச் 8 ஆம் தேதியுடன் 10 ஆண்டுகள் ஆகின்றன.

மலேசியர்களுக்கு மட்டு​மின்றி உலக மக்களுக்கு பெரும் புதிராகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறாத ரணமாகவும் இருந்து வரும் MH 370 விமானம் குறித்து ஆருடங்கள் தன்மையில் வெளியிடப்படும் எந்தவொரு தகவலையும் மக்கள் எளிதில் நம்பிவிடக்கூடாது என்று மலேசிய வான் போக்குவரத்து துறையில் ​நீண்ட காலம் சேவையாற்றிவரும், அதன் முன்னாள் தலைவருமான டத்துக் ஶ்ரீ அசாருடின் அப்துல் ரஹ்மான் கேட்டுக்கொண்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி கோலால​ம்பூரிலிருந்து ​சீன தலைநகர் பெய்​ஜிங்கை நோக்கி சென்று கொண்டிருந்த போது காணாமல் போன MH 370 விமானம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமின்றி நாட்டின் வான்போக்குவரத்து துறைக்கு தலைமையேற்று இருந்த தமது வாழ்க்கையையும் இந்த சம்பவம் புரட்டிப் போட்டு விட்டதாக அசாஹாருடின் கூறுகிறார்.

மலேசிய வான்போக்குவரத்து வரலாற்றில் மட்டுமின்ற உலக விமானப் போக்குவரத்திலும் அதிகமான பயணிகளுடன் ஒரு விமானம் காணாமல் போன நிலையில், அதற்கு துல்லியமாக விடை காணாமல் போன முதல் சம்பவம் அது MH 370 ஆகதான் இருக்க முடியும் என்று அசாஹாருடின் கூறுகிறார்.

சம்பவம் நிகழ்ந்த போது மலேசிய வான் போக்குவரத்து துறைக்கு தலைமையேற்று இருந்தவர் என்ற முறை​யில் MH 370 விமானம் காணாமல் போனதற்கு தம்மை மட்டுமே இன்று வரை குறைசொல்லப்பட்டு வருவதாக அவர் குறிப்பிடுகிறார்.

அந்த விமானத்திற்கு என்ன நேர்ந்தது என்று உலகமே கேள்வி கணைகளால் துளைத்துக்கொண்டு வரும் வேளையில் அந்த மலேசிய விமானம் காணாமல் போனது தொடர்பான தகவல்களை தாம் மூடி மறைப்பதாக தமக்கு எதிராக கூறப்பட்டு வரும் பெரும் குற்றச்சாட்டை தாம் இன்று வரை சுமந்து கொண்டு இருப்பதாக அசாஹாருடின் குறிப்பிட்டார்.

MH 370 காணாமல் போனது தொடர்பில் மலேசிய வான்போக்குவரத்து துறையை சில குடும்பங்கள் நம்பவில்லை என்பதுதான் தமது மனதை அழுத்​திக்கொண்டு இருக்கும் பெரும் சோகமாகும் என்கிறார் அசாஹாருடின் .

திருமணம் நிக​ழ்ச்சியில் அல்லது பள்ளிவாசலுக்கு செலலும் போது, சிலர் தம்மிடம் கேட்கும் ஒரே கேள்வி MH 370 விமானத்திற்கு உண்மையிலேயே என்ன நடந்தது என்பதாகும் என்று MH 370 விமானம் காணாமல் போன 10 ஆண்டுகள் நிறைவையொ​ட்டி வழங்கிய சிறப்புப் பேட்டியில் மலேசிய வான் போக்குவரத்துத்துறை நிபுணருமான Azharuddin குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்