May 21, 2026
Thisaigal NewsYouTube
பொறாமையின் காரணமாகவே நடந்த கொலையாகும்
தற்போதைய செய்திகள்

பொறாமையின் காரணமாகவே நடந்த கொலையாகும்

Share:

கிள்ளானில் காருக்குள் ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் நிகழ்ந்த வாக்குவாதத்தில் அந்தப் பெண், கத்தியால் பலமுறை குத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவத்திற்கு பின்னணியில் பொறாமை காரணமாக இருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிப்பதாக சிலாங்கூர் மாநில போலீஸ் துணைத்தலைவர் டத்தோ எஸ்.சசிகலா தேவி தெரிவித்துள்ளார்.

கிள்ளான், தாமான் சி லியுங், ஜாலான் பாயு திங்கி 5 இல் நேற்று பிற்பகலில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் தன்னுடன் இருந்த பெண்ணை கொலை செய்து விட்டு, தன்னைத் தானே கத்தியால் குத்திக்கொண்டு காயமுற்ற 44 வயது நபர், புலன் விசாரணைக்கு ஏதுவாக வரும் டிசம்பர் 25 ஆம் தேதி வரை தடுப்புக்காவலில் வைப்பதற்கு நீதிமன்ற ஆணையைப் போலீசார் பெற்றுள்ளதாக டத்தோ எஸ்.சசிகலா தேவி குறிப்பிட்டார்.

இந்த கொலை நிகழ்வதற்கு முன்னதாக அருகில் உள்ள உணவகத்திற்கு அந்த ஆணும், பெண்ணும் சென்ற போது அவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் காருக்கு வந்தப் பின்னரும் வாக்குவாதம் தொடர்ந்த போது, இந்த கத்திக்குத்து சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது என்று ஷா ஆலாமில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ சசிகலா தேவி இதனை தெரிவித்தார்.

Related News

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட் மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை