May 21, 2026
Thisaigal NewsYouTube
பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது
தற்போதைய செய்திகள்

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட் மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

Share:

சிகிச்சை பெறாமலேயே அரசுத் துறை ஒன்றில், சுமார் 53 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போலி மருத்துவக் கோரிக்கை ஆவணங்களைச் சமர்ப்பித்த குற்றச்சாட்டின் கீழ் தம்பதியர் உட்பட மூவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் கைது செய்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை பேரா மாநில எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது, 50 வயது மதிக்கத்தக்க நிறுவன இயக்குநர் மற்றும் 40 வயது மதிக்கத்தக்க தம்பதியர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 2024 ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை உடல்நல மறுவாழ்வு சிகிச்சைக்கான போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து இந்த மோசடியில் ஈடுபட்டது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, ஈப்போ நீதிமன்ற உத்தரவின்படி தம்பதியருக்கு 7 நாட்கள் காவலும், நிறுவன இயக்குநருக்கு 5 நாட்கள் காவலும் விதிக்கப்பட்டுள்ளது இச்சம்பவம் குறித்து 2009ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Related News

டீசல் விலை உயர்வு: கட்டுமானச் செலவு 15% வரை அதிகரிப்பு என பி.கே.பி.எம் தகவல்

டீசல் விலை உயர்வு: கட்டுமானச் செலவு 15% வரை அதிகரிப்பு என பி.கே.பி.எம் தகவல்

சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: காப்பகப் பொறுப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்

சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: காப்பகப் பொறுப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள் கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

மாமன்னரை அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்