காலியாக உள்ள பண்டான் மற்றும் சித்தியாவாங்சா நாடாளுமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய அவசியமில்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இத்தகவலை தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோ ஸ்ரீ ரம்லான் ஹாரூன் உறுதிப்படுத்தியுள்ளார்.
கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் 54(1) பிரிவின் அடிப்படையில், இந்த இரண்டு தொகுதிகளிலும் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்ப தேவையில்லை என்று நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ டாக்டர் ஜொஹாரி அப்துல் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை ஜோஹாரியிடமிருந்து தேர்தல் ஆணையம் பெற்றுவிட்டதையும் டத்தோ ஸ்ரீ ரம்லான் ஹாரூன் சுட்டிக் காட்டியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை, பண்டான் மற்றும் சித்தியவாங்சா நாடாளுமன்ற உறுப்பினர்களான டத்தோஸ்ரீ ரபிசி ரம்லி மற்றும் நிக் நஸ்மி நிக் அஹ்மட் ஆகிய இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பித்ததையடுத்து, அத்தொகுதிகள் காலியாகின என்பது குறிப்பிடத்தக்கது.








