PADU- வில் 23 லட்சம் பேர் தங்களை பதிவு செய்துள்ளனர்

அரசாங்கத்தின் பல்வேறு உதவிகளை மக்கள் பெறுவதற்கு ஏதுவாக அவர்களின் விவரங்களை பதிவு செய்து கொள்ளும் அரசாங்கத்தின் முதன்மை தரவுகள் தளமான PADU தொடங்கப்பட்டதிலிருந்து நேற்று வரை மொத்தம் 23 லட்சத்து 80 ஆயிரம் பேர் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளதாக அத்தளத்தின் மேலாண்மை வட்டாரம் கூறியது.

கடந்த ஜனவரி 2 ஆம் தேதி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமினால் தொடக்கி வைக்கப்பட்ட இந்த தரவுத் தளத்திற்கு மலேசிய மக்கள் அளித்து வரும் ஆதரவுக்கு தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாக PADU தனது முகநூலில் தெரிவித்துள்ளது.

இந்த தரவுத் தளத்தில் பதிவு செய்தவர்கள் எண்ணிக்கையில் சிலாங்கூர் தொடர்ந்து முதலிடம் வகிப்பதை அந்த முகநூல் பக்கத்தில்
வெளியிடப்பட்ட தகவல் வரைபடம் காட்டியது.

சிலாங்கூரில் 3 லட்சத்து 80 ஆயிரமம் பேரும் சரவா மாநிலத்தில் 3 லட்சத்து 10 ஆயிரம் பேரும், ஜோகூரில் 2 லட்சத்து 40 ஆயிரம் பேரும் பேராவில் 2 லட்சத்து 10 ஆயிரம் பேரும் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். .

இந்த PADU முதன்மை தரவுத் தளத்தில் பதிவு செய்வதற்கான இறுதி நாள் வரும் மார்ச் 31ஆம் தேதியாகும்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்