Pemandu – வின் கட்டுப்பாட்டிற்குள் மித்ராவின் நிதியா?

புத்ராஜெயா, மார்ச் 14 –

இந்தியர்களின் சமூகவியல், பொருளாதார உருமாற்றுப்பிரிவான மித்ராவின் நிதியை பெமான்டு எனப்படும் செயல்திறன் நிர்வாக, சேவைப்பிரிவு தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதாக கூறப்படுவதை தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்துக் ஶ்ரீ ஆரோன் டாகாங் மறுத்துள்ளார்.

அதேவேளையில், இந்தியர்களின் நலன் சார்ந்த விவகாரங்களுக்கு மானியம் கேட்டு சமர்பிக்கப்படும் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் உரிமையையும், மானியத்தை அங்கீகரிக்கும் அதிகாரத்தையும் பெமான்டூ கொண்டிருப்பதாக கூறப்படுவதையும் அமைச்சர் டத்துக் ஶ்ரீ ஆரோன் டாகாங் மறுத்துள்ளார்.

மித்ராவின் blueprint திட்டங்களுக்கு வடிவம் கொடுத்து, வியூகம் வகுத்து அது எந்த இலக்கை நோக்கி செல்ல வேண்டும் என்பதற்கான திட்டங்களை ஒற்றுமைத்துறை அமைச்சுக்கு வகுத்து கொடுப்பதற்கு ஓர் ஆலோசனை நிறுவனமாகவே பெமான்டு செயல்படுமே தவிர மித்ராவின் நிதியை கையாளும் பொறுப்பை அது கொண்டிருக்கவில்லை என்று அமைச்சர் டத்துக் ஶ்ரீ ஆரோன் டாகாங் இன்று மக்களவையில் விளக்கம் அளித்தார்.

மித்ராவில் பெமான்டூ வின் பங்கேற்பானது, இந்தியர்களின் சமூகவியல் பொருளாதார உருமாற்றுப் பிரிவான மித்ராவின் சிறப்பு பணிக்குழு தலைவர் பி. பிரபாகரனின் பங்களிப்பை எந்தவகையிலும் பாதிக்க செய்யாது என்று ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்துக் ஶ்ரீ ஆரோன் டாகாங் உறுதியளித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்