Rahmah உதவித் தொகை ஆயிரத்து 200 வெள்ளியாக அதிகரிப்பு

MADANI அரசாங்கத்தின் SARA எனப்படும் Rahmah உதவித் தொகை கடந்த ஆண்டு 600 வெள்ளியாக இருந்த நிலையில், இவ்வாண்டு அது ஆயிரத்து 200 வெள்ளியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

குடும்பங்களுக்கான உதவித் தொகை ஆயிரத்து 200 வெள்ளியாகவும் திருமணம் ஆகாத தனிநபர்களுக்கு 600 வெள்ளி உதவித் தொகை நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

இம்மாதம் 22 ஆம் தேதி முதல் கட்டம் கட்டமாக Rahmah உதவித் தொகை பகிர்ந்தளிக்கப்படும் என நிதியமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, அடிப்படை உணவுப் பொருட்களை மட்டும் வாங்கக்கூடியதாக நடப்பில் இருந்த இந்த Rahmah உதவித் தொகை, உடல் சுத்தம், மருந்துகள், பள்ளி உபகரணப் பொருட்கள் ஆகியவற்றை வாங்கவும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

தகுதி பெற்றவர்கள், தங்களின் மைகாட் கொண்டு அருகில் உள்ள தேர்தெடுக்கப்பட்ட கடைகளில் இப்பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

கடந்த ஆண்டு இந்தத் திட்டத்திற்குக் கிடைத்த ஆதரவைக் கருத்தில் கொண்டு , அடிப்படைப் பொருட்களை வாங்கிக் கொள்ளும் கடைகளின் எண்ணிக்கை 515 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்