போலீஸ் துறையுடன் பினாங்கு இந்து அறப்பணி வாரியப் பொறுப்பாளர்கள் சந்திப்பு

வரும் ஜனவரி 25 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் பினாங்கு தைப்பூச விழாவையொட்டி பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவர் RSN ராயர், துணைத்தலைவர் செனட்டர் டாக்டர் இரா. லிங்கேஸ்வரன் மற்றும் இதர ஆணையர்கள், நேற்று பினாங்கு மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் Datuk Khaw Kok Chin- னுடன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு ஒன்றை நடத்தினர்.

பினாங்கு போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, பினாங்கு தண்ணீர்மலையில் இரு ஆலயங்களில் கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் , தங்க இரதம், வெள்ளி இரதம் ஊர்வலங்கள் உட்பட தைப்பூச ஏற்பாடுகள் குறித்து இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் ராயரும், இதர ஆணையர்களும் Datuk Khaw Kok Chin தலைமையிலான போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

இந்த விளக்கமளிப்புக்கு பின்னர் பினாங்கு தைப்பூசத்திற்கு பாதுகாப்பு பணிக்கு 1,600 முதல் 1,700 போலீஸ்காரர்கள் அமர்த்தப்படுதற்கு கமிஷனர் Datuk Khaw Kok Chin உறுதி அளித்துள்ளார்.

அதேவேளையில் தைப்பூச விழாவில் குந்தகம் விளைவிக்கும் அச்சுறுத்தல்கள், தகராறு, நாசவேலைகள், போக்குவரத்தை நிலைக்குத்த செய்தல், பட்டாசு வெடித்தல், பொதுமக்கள் மீது பொருட்களை வீசுதல், ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்துதல், அதிக சத்தமாக இசையை ஒலிக்க செய்தல் , திருட்டு சம்பவங்கள், பிச்சை எடுப்பது, சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்துல் முதலியவற்றை ஒடுக்க அவை போலீசாரின் தீவிர கண்காணிப்பின் கீழ் விடப்பட்டுள்ளதாக ராயர் தெரிவித்தார்.

தைப்பூச விழா சமயத்தின் பால் நடத்தப்படும் பெருவிழாவாகும். பக்தர்களும் பொதுமக்களும் பொது ஒழுங்கைப் பின்பற்றி, விழாவின் மாண்பையும், புனிதத்தையும் காக்கும்படி பினாங்கு இந்து அறப்பணி வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்