‘Sotong ride’ – டில் இருந்து கீழே விழுந்த இருவர் படுங்காயம்

கோத்தா கினாபாலு, மார்ச் 7 –

கோத்தா கினாபாலு, கொம்பெலெக்ஸ் சுக்கான் லிக்காஸ் அருகே நிகழ்ந்த ‘funfair’ விளையாட்டிலிருந்து கீழே விழுந்ததில் இருவர் பலத்த காயங்களுக்கு ஆளாகினர்.

பாதிக்கப்பட்ட இரு ஆண் உட்பட ஒரு பெண் சொத்தோங் ரைட் விளையாட்டில் நகரும் போது தவறி கீழே விழுந்ததாக நம்பப்படுகின்றது.

நேற்று இரவு 8:58 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தை குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு அவசர அழைப்பு வந்ததாகவும் இது சம்பந்தப்பட்ட காணொளிகள் மற்றும் படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றதாகவும் கோத்தா கினாபாலு தீயணைப்பு, மீட்புப்படை நிலையத்தின் தலைவர் ஒர்டைன் கிலு கூறினார்.

பாதிக்கப்பட்ட அந்நபர்களுக்கு அவசர சேவைகள் உதவி பிரிவின் கீழ் முதலுதவி வழங்கப்பட்ட வேளையில் மேல் சிகிசைக்காக குவின் எலிசபத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஒர்டைன் கிலு தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்