ஆடவருடன் ஏற்பட்ட தகராறில் போலீசார் 7 தையல்

பாயான் லெப்பாஸ், மார்ச் 7 –

பினாங்கு, Tதெலுக் கும்பார் ரில் தப்பித்து ஓட முயற்சித்த போதைப்பொருளுக்கு அடிமையாகிய ஆடவருடன் ஏற்பட்ட கைகலப்பில் கட்டையால் தாக்கப்பட்டத்தில் போலீசாருக்கு 7 தையல்கள் போடப்பட்டன.

இச்சம்பவம் பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைமையகமான போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள்
நாடு முழுவதும் மேற்கொண்ட ஒப்ஸ் தாபிஸ் சோதனையின் போது நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது.

முன்னதாக, போதைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவின் உறுப்பினர்கள் கடந்த செவ்வாய்கிழமை மாலை 4 மணியளவில் சந்தேகிக்கும் கடைக்கு பின்னால் உள்ள காக்கி கெத்தும் இடத்தை சோதனை செய்ததாக பினாங்கு போலீஸ் தலைவர் டத்துக் மொகமாட் யூசுப் ஜான் மொகமாட் தெரிவித்தார்.

இந்த சோதனையின் போது போலீசாரிடமிருந்து தப்பிக்க முற்பட்ட சந்தேகிக்கும் அவ்வாடவரை துரத்தி சென்று பிடிக்க முயற்சித்த வேளையில் இச்சம்பவம் நடந்திருப்பதாக மொகமாட் யூசுப் கூறினார்.

இதன் விளைவாக சம்பந்தப்பட்ட போலீசாரின் இடது கையில் படுங்காய‌ம் ஏற்பட்டு தையல்கள் போட காரணமாக இருந்ததாக மொகமாட் யூசுப் மேலும் அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்