எஸ்.பி.ஆர்.எம் விசாரணை, எங்கள் தந்தைக்கு குறிவைக்கப்பட்டதாகும், துன் மகாதீரின் இரு புதல்வர்கள் கூறுகின்றனர்

கோலாலம்பூர், மார்ச் 26 –

சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும் என்று கோரி, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM, தங்களிடம் நடத்தி வரும் விசாரணையானது, தங்கள் தந்தை துன் மகாதீர் முகமதுவிற்கு குறிவைக்கப்பட்டதாகும் என்று அந்த முன்னாள் பிரதமரின் இரு புதல்வர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்கள் தந்தை மகாதீருக்கு எதிரான விசாரணைக்கு உதவுமாறு தங்களை SPRM கேட்டுக்கொண்டுள்ளதாக கடந்த ஒரு மாதகாலமாக அந்த ஆணையத்தின் விசாரணைக்கு ஆளாகியுள்ள துன் மகாதீன் புதல்வர்களான மொக்சாநி மகாதிர்- ரும், மிர்சான் மகாதிர்- ரும் முதல் முறையாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

எங்களுக்கு எதிராக SPRM நடத்தி வரும் விசாரணையில், அவர்களின் முதன்மை சந்தேக நபர், எங்கள் தந்தை மகாதீர்தான். நாங்கள் வெறும் சாட்சிகள்தான் என்று 63 வயதான மொக்சாநி குறிப்பிட்டார்.

எங்கள் தந்தையாருக்கு குறி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு நாங்கள் உதவ வேண்டும் என்று SPRM கேட்டுக்கொண்டுள்ளதாக Mokhzani தெரிவித்தார்.

நாட்டின் நான்காவது பிரதமராக துன் மகாதீர் முகமது 1981 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டது முதல் சுமார் 40 ஆண்டுகளுக்கு உரிய தங்களின் சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும் என்று துன் மகாதீரின் புதல்வர்களான மொக்சாநி மகாதிர்- ரையும், மிர்சான் மகாதிர்- ரையும் SPRM கேட்டுக்கொண்டுள்ளது.

தங்கள் தந்தை பிரதமராக இருந்த காலத்தில் எத்தகையை சொத்துக்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்பதை கணக்கு காட்டுமாறு அவ்விருவருக்கும் SPRM உத்தரவிட்டுள்ளது.

மலேசியாவில் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் மகாதீரின் பிள்ளைகளும் அடங்குவர் என்று சட்டவிரோத சொத்து குவிப்புகளை அம்பலப்படுத்தி வரும் பண்டோரா பேப்பர்ஸ் அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த விசாரணையை SPRM தொடங்கியுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்