குடும்பமாது கஸ்தூரி சுப்பிரமணியம் காணவில்லை

ஜோகூர், மார்ச் 26 –

ஜோகூர், கூலாயிலிருந்து பகாங், பெந்தோங்கில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு புறப்பட்டு சென்ற தனது மனைவி கஸ்தூரி சுப்பிரமணியம், கடந்த மூன்று நாட்களாக காணாதது குறித்து கணவர் சி. முத்துக்குமார், செந்தூல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

41 வயது கஸ்தூரியின் பாதுகாப்பு குறித்து கவலையுற்றுள்ள கணவர் முத்துக் குமாரும்,அவரின் மூன்று பிள்ளைகளும், குடும்பமாது கஸ்தூரியை பார்த்தவர்கள் தங்களிடமோ அல்லது அருகில் உள்ள போலீஸ் நிலையத்திலோ தகவல் அளிக்குமாறு பொது மக்களின் உதவியை நாடியுள்ளளர்.

ஜோகூர், கூலாய், பண்டார் புத்ரா, லோரோங் பங்காவு- வை சேர்ந்த கஸ்தூரி கடந்த மார்ச் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.45 மணியளவில் பெந்தோங்கில் உள்ள தமது தாயார் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார்.

கணவர் முத்துக்குமாரும் , பிள்ளைகளும் கஸ்தூரியை கூலாயிலிருந்து கோலாலம்பூர், தி.பி.எஸ் பேருந்து நிலையத்திறகு செல்வதற்கு பேருந்தில் வழியனுப்பி வைத்துள்ளனர். கோலாலம்பூர் தி.பி.எஸ் பேருந்து நிலையத்தை மாலை 5.35 மணியளவில் வந்தடைந்த கஸ்தூரி, பெந்தோங்கிற்கு செல்ல கோலாலம்பூர் பெக்கெலிலிங் பேருந்து நிலையத்திற்கு செல்வதாகவும், தனது கைப்பேசி பெட்டரி குறைவாக இருப்பதாகவும் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்..

அதன் பின்னர் குடும்பத்தினர், கஸ்தூரியுடன் தொடர்பு கொள்ள பல முறை முயற்சி செய்தும், தொடர்பு கிடைக்காததால், அவரின் பாதுகாப்பு குறித்து கவலையுற்ற கணவரும், பிள்ளைகளும் இரவோடு இரவாக கூலாயிலிருந்து புறப்பட்டு, அதிகாலை 2 மணியளவில் கோலாலம்பூர் பெக்கெலிலிங் பேருந்து நிலையத்தை வந்தடைந்து கஸ்தூரியை தேடியிருக்கின்றனர்.

பெந்தோங்கில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றடையாத நிலையில் , கஸ்தூரிக்கு ஏதாவது நேர்ந்து இருக்குமா? என்ற அச்சத்தில் கணவர் முத்துகுமார் , அதிகாலை 5 மணியளவில் செந்தூல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

கடந்த மூன்று நாட்களாக கஸ்தூரியை காணாதது குறித்து மிகுந்த வேதனையில் உள்ள குடும்பத்தினர். அந்த குடும்பமாதுவை பார்த்தவர்கள் 011-7034 8353 என்ற தொலைபேசி எண்ணில் உடனடியாக தொடர்புகொள்ளமாறு கேட்டுக்கொள்ளப்பட்டள்ளனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்