STH ICT Consultant இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா

2022/2023 ஆம் ஆண்டு STH ICT Consultant பட்டமளிப்பு விழா அதன் தலைவர் திலகவதி பாலசந்திரன் முன்னிலையில் கோலாலம்பூர், மலாயா பல்கலைக்கழகத்தில் நேற்று சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட இவ்வகுப்பு, சிறுவயது முதல் மாணவர்கள் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் அறிவாற்றலுடன் வளர வேண்டும் என்பதற்காக பாட நேரத்திற்கு அப்பாற்பட்டு மேற்கொள்ளப்படுவதுடன் 3000 –க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது இதில் பயின்று வருகின்றனர்.

இரண்டாவது ஆண்டாக நடைபெறும் இந்த பட்டமளிப்பு விழாவிற்கு STH ICT Consultant- வின் நிர்வாக இயக்குநர் சசிகுமார் ராமா, STH ICT Consultant –வின் CEO சாந்தி அர்ஜுதன், மலேசிய தலைமையாசிரியர் மன்ற தலைவர் SS பாண்டியன், Asia Pacific University – வின் CEO Gurpardeep, EWRF –வின் தலைவர் Govinda, டத்தோ Vignaesvaran Jeyandran மற்றும் நிகழ்விற்கு முத்தாய்ப்பிக்கும் வகையில் சிறப்பு பிரமுகராக Batu எம்.பி P. பிரபாகரன் ஆகியோர் வருகை புரிந்திருந்தனர்.

நாடு தழுவிய அளவில் 6 மாநிலங்களில் உள்ள 32 ஆரம்ப தமிழ்ப்பள்ளிகளில் இந்த STH ICT Consultant வகுப்பு நடத்தி வருவதுடன் 23 தமிழ்ப்பள்ளிகளிலிருந்து 180 மாணவர்கள் 3 வருட வகுப்பினை முழுமையாக பூர்த்தி செய்து நேற்று பட்டம் பெற்றனர்.

Asia Pacific University of Technology and Innovation மற்றும் Juba Academy – வுடன் ஒன்றிணைந்து நிகழ்த்தப்படும் இந்த ICT வகுப்பு மாணவர்களுக்கு ஒரு தரமான சான்றிதழை வழங்குவது மட்டுமல்லாமல் தமிழ் மாணவர்கள் தகவல், தொழில்நுட்பத்தில் சிறந்திட செய்வதே இதன் நோக்கமாகும் என்று திலகவதி தெரிவித்தார்.

வளர்ந்து வரும் மாணவர்களுக்கு தகவல், தொழில்நுட்பம் பிரதான ஒன்றே. இதுபோன்ற வகுப்புகளுக்கு பெற்றோர்கள் நிச்சயம் தங்களின் பிள்ளைகளை அனுப்ப வேண்டும் என்று பிரபாகரன் கேட்டுக் கொண்டார்.

வகுப்பு நேரத்திற்கு அப்பாற்பட்டு நடத்தப்படும் இந்த ICT வகுப்பில் மாணவர்கள் பல புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதுடன் நிறுத்திவிடாமல் எதிர்காலத்திற்கும் நன்மை தருகின்றது என்று திசைகளுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் சில மாணவர்கள் கூறியிருந்தனர்.

பிள்ளைகளை ஊக்குவிக்கும் வகையில் பட்டம் பெற்ற மாணவர்களின் பெற்றோர்களும் நிகழ்வில் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தது மட்டுமல்லாமல் பூங்கொத்து வழங்கி புகைப்படம் எடுத்து கொண்டு நிகழ்வினை மெருகூட்டினர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்