Sulu சுல்தான் வாரிசுதாரர் வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு : குற்றத்திற்காக நடுவருக்கு 6 மாத சிறை

கோலாலம்பூர், ஜன – 8,

சூலு சுல்தான் வாரிசுதாரர்கள் என்று கூறிக்கொண்ட தரப்பினருக்கு மலேசியா 1,492  கோடி அமெரிக்க டாலர் அல்லது 6,714 கோடி வெள்ளியை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கிய நடுவர் மன்றத் தலைவர்  Gonzalo Stampa விற்கு  ஸ்பெயின் நீதிமன்றம் 6 மாத சிறைத் தண்டனை விதித்தது.

  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடுவர்  Gonzalo Stampa-,  குற்றவாளியே என்று தீர்ப்பு அளித்த ஸ்பெயின் நீதிமன்றம், 6 மாத சிறைத் தண்டனையுடன், நடுவர் மன்றத் தலைவராக செயல்படுவதிலிருந்து அவரை ஓராண்டு காலம்  இடைநீக்கமும்  செய்துள்ளது.

தீர்ப்பின் உள்ளடக்கத்தை  சட்டத்துறை அமைச்சர் Datuk Seri Azalina Othman Said  இன்று அறிவித்தார். சூலு வாரிசுதாரர்கள் என்று கூறிக்கொள்ளும் தரப்பினர் தொடுத்துள்ள வழக்கில் அரசாங்கம் கடுமையான போக்கை கொண்டுள்ளது என்பதற்கு  இத்தீர்ப்பு ஓர் உதாரணமாகும் என்று Azalina Othman குறிப்பிட்டார்.

மலேசிய அரசாங்கத்திற்கு எதிராக சூலு தரப்பினர் தொடுத்த  வழக்கை தள்ளுபடி செய்துள்ள Madrid நீதிமன்றத்தின் தீர்ப்பை நடுவர் மன்றத் தலைவர் Gonzalo Stampa பொருட்படுத்தாமல் செயல்பட்டதால்  அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்விவகாரம் தொடர்பில் மலேசிய அரசாங்கம் அளித்த புகாரைத் தொடந்து நடுவர் Gonzalo Stampa- விற்கு எதிராக  நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஸ்பெயின் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் பதிவு செய்தனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்