அதிக நேர வேலை கட்டாயம், ‘சௌனா’ அறையில் உறக்கம்

ஷா அலாம், ஜாலான் கெபுனில் உள்ள மின்னணுவியல் மறுசுழற்சி தொழிற்சாலையில் அந்நிய பிரஜைகளை ஒருநாளைக்கு 10 மணி நேரம் வேலை செய்வதற்கு கட்டாயப்படுத்துவதோடு ‘சௌனா’ அறையில் உறங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 5 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் பாதிக்கப்பட்ட மியன்மார் நாட்டை சேர்ந்த ஒருவர் மீட்கப்பட்டார்.

விசாரணையில் அந்நிய பிரஜைகளை வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்யவும், வசதியற்ற இடத்தில் தங்க வைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களை வெற்றிகரமாக மீட்டதுடன் 101 வெளிநாட்டு பிரஜைகள் பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் தலைவர் ACP Soffian Santong கூறினார்.

இச்சோதனையில் தொழிற்சாலை உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சோஃபியன் சாண்டோங் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்