அதிரடிச் சோதனைகள் தொடரும்

கள்ளக் குடியேறிகள் தொடர்பான அதிரடிச் சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தேசியக் காவல் படையின் துணைத் தலைவர் அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.

அதிகமான கள்ளக் குடியேறிகள் இருக்கும் பகுதிகள் தற்பொழுது அடையாளம் காணப்பட்டுள்ளன. கிள்ளான் பள்ளத்தாகுப் பகுதிகள் மட்டும் இன்றி, ஜோகூர், கெடா, கிளாந்தான் ஆகிய மாநிலங்களிலும் இப்பிரச்னை இருக்கிறதாக அயோப் கான் குறிப்பிட்டார்.

கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி, தலைநகர், ஜாலான் சிலாங் இல் 1,101 கள்ளக் குடியேறிகள் கைது செய்யப்பட்ட நிலையில், அங்கு ஒரு லட்சத்து 1 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள கடத்தல் பொருட்களையும் போலீஸ் கைப்பற்றி உள்ளது. அவர்களில் 600க்கும் மேற்பட்டவர்கள் மீது அரசுத் துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பரவலான நிலையில் கள்ளக் குடியேறிகள் கைது செய்யப்படுவதால், அவர்களைத் தடுத்து வைக்கப்படும் இடவசதி விவகாரத்தில் போலீஸ் சில சிக்கல்களை எதிர்கொண்டாலும், மேலும் அதிகமான சோதனை நடவடிக்கைகளை காவல் துறை தொடர்ந்து மேற்கொள்ளும் என அயூப் கான் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்