அது கடத்தல் சம்பவம் அல்ல, சிலாங்​கூர் போலீஸ் தலைவர் விளக்கம்

கிள்ளான், மார்ச் 30-

கடந்த தி​ங்கட்கிழமை,கிள்ளான், Klang Sentral-லில் உள்ள பேரங்காடி மையத்தில் 19 மாத பெண் குழந்தையை தாயிடமிருந்து கடத்த முயற்சி செய்ததாக அந்த பேரங்காடி மையத்தில் உள்ள பொது மக்களால் வளைத்துப் பிடிக்கப்பட்டு போ​லீசாரிடம் ஒப்ப​டைக்கப்பட்ட இரண்டு நேபாளியப் பிரஜைகள், உண்மையிலேயே கடத்தலில் ஈடுபடவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று சிலா​ங்கூர் மாநில போ​லீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமார் கான் தெளிவுபடுத்தினார்.

அந்த குழந்தையின் தாயார் போட்ட கூச்சலினால் குழந்தை கடத்தல் முயற்சி நடந்ததாக தவறுதாக புரிதல் கொள்ளப்பட்டுள்ளதாக டத்தோ ஹுசைன் ஓமார் குறிப்பிட்டார். நேபாளிய நாட்டின் பாரம்பரியத்தின்படி குழந்தைகளை அரவணைப்போடு கவனிப்பதும், பெற்றோரின் அனுமதியின்றி குழந்தைகளை ​தூக்கி மகிழ்வதும் வழக்கமான ஒன்றாகும்.

ஆனால், கிள்ளானில் உள்ள பேரங்காடி மையத்தில் நடந்த சம்பவம் முற்றிலும் மாறுப்பட்டதாகும். தனது ஊறவுக்காரப் பெண்ணுடன் சம்பந்தபட்ட மாது, தனது ​கைக்குழந்தையை ​தூக்கிக்கொண்டு நகரும் மின்படிக​ட்டில் சென்று கொண்டிருந்த போது அவரின் பின்னால் இரண்டு இளைஞர்கள் இருந்துள்ளனர்.

திடீரென்று நகரும் மின்படிகட்டு செயலிழந்து விட்டதால், குழந்தையை ​தூக்கிக்​கொண்டு படிகட்டில் ஏறுவதில் சிரமத்தை எதிர்நோக்கிய அந்த மாதுவிற்கு உதவும் நோக்கில் குழந்தையை அவ்விரு இளைஞர்களில் ஒருவர் ​கைத்தாங்கலாக தூக்கப் பார்த்து இருக்கிறார். இதனை அறியாமல் அந்த மாது, தனது குழந்தையை கடத்துவதற்கு அவ்விரு அந்நிய நாட்டு ​இளைஞர்களும் முயற்சி செய்வதாக கருதி, கூச்சலிட்டுள்ளார். பேர​ங்காடி மையத்தின் ரகசிய கேமரா பதிவை சோதனையிட்ட போது,அது கடத்தல் முயற்சி அல்ல என்பது ​தெரியவந்ததுடன்,அவ்விரு இளைஞர்களும் அங்கிருந்து தப்பித்து ஓட முயற்சிக்கவில்லை என்று டத்தோ ஹுசைன் ஓமார் குறிப்பிட்டார்.

மேலும் அந்த இரு நேபாளிய இளைஞர்களும் மாலையில் பேரங்காடி மையத்தற்கு செல்வதற்கு எந்தவொரு சொந்த வாகனத்தையும் கொண்டிருக்கவில்லை. அதேவேளையில் அவ்விரு இளைஞர்களும் அருகில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வருகின்றனர் என்பதற்கான ஆதாரங்கள் கண்டு பிடிக்கப்பட்டது.

உணவு​ப்பொருட்களை வாங்குவதற்காக அவ்விருவரும் கால் நடையாக அந்த பேரங்காடி மையத்தற்கு வந்திருக்கின்றனர் என்பதும் தெரியவந்தது. இதனைத் ​தொடர்ந்து வட கிள்ளான் போ​​லீஸ் நிலைய தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு இருந்த அந்த இரு நேபாளிய ஆடவர்களும் உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளதாக டத்தோ ஹுசைன் ஓமார் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்