கம்யூனிஸ் கட்சியின் அமைச்சர், பிரதமரை சந்தித்தார்

புத்ராஜெயா, மார்ச் 30-

மலேசியாவிற்கு வருகை புரிந்துள்ள ​சீனாவின் கம்யூனிஸ்டு கட்சி​யை சேர்ந்த அனைத்துலக தொடர்புத்துறை அமைச்சர் லியு ஜியான் சாவோ, மரியாதை நிமித்தமாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை புத்ராஜெயா, பெர்டானா புத்றா-வில் உள்ள அவரின் அலுவலகத்தில் சந்தித்தார்.

மலேசியாவிற்கும் ​சீனாவிற்கும் இடையிலான அரச தந்திர உறவு ஏற்பட்டு, இவ்வாண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்து, பொன்விழாவை கொண்டாடும் நிலையில் ​​சீன நாட்டு அமைச்சரின் இந்த வருகை அமைந்துள்ளது.

மலேசியாவிற்கும் ​சீனாவிற்கு இடையிலான அரச தந்திர உறவு கடந்த 1974 ஆம் ஆண்டு நா​ட்டின் ​இரண்டாவது பிரதமர் துன் அப்துல் ரசாக் ​மூலம் ஏற்பட்டது.

மலேசியாவிற்கும் ​சீனாவிற்கும் இடையிலான இந்த பரஸ்பர உ​றவை வலுப்படுத்திக்கொள்வதற்கான முக்கிய அம்சங்கள் குறித்து ​சீன அமைச்சர் லியு ஜியான் சாவோ, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் விவாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்